--- --:--:-- --

காஷ்மீரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை! விடிய விடிய அதிரடி தாக்குதல்!

9

காஷ்மீரில் ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதலில் பயங்கரவாதிகள் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சோபியான் மாவட்டத்தில் உள்ள வெண்புறாபில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராணுவம் சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் மாநில போலீசார் அடங்கிய சிறப்பு குழுவினர் குறிப்பிட்ட அந்த பகுதியை சுற்றிவளைத்தனர்.

 

இதை அறிந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே விடிய விடிய நடந்த துப்பாக்கி சண்டையில் முதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பின்னர் தொடர்ந்து இராணுவம் எடுத்த அதிரடி நடவடிக்கையில் சிறிது நேரத்திலேயே மேலும் 2 பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி பலியாகினர்.

 

அவர்கள் யார் எந்த பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஓட்டுநர்கள் பாதுகாப்பு உடைகளை அணிந்து பேருந்தை இயக்கினர். அறந்தாங்கியில் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவ பணியாளர்களின் போக்குவரத்திற்காக இரண்டு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்து ஓட்டுனர்கள், பாதுகாப்பு உடைகள் அணிந்து பணியாற்ற வேண்டுமென அறந்தாங்கி போக்குவரத்து கிளை மேலாளர் பொது மேலாளர் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். அதன்பேரில் ஓட்டுனர்கள் பாதுகாப்பு உடையுடன் பேருந்தை இயக்கினர்.

Leave a Reply

Right Menu Icon