ஒரு நம்பர் லாட்டரி விற்பனையில் 4 பேர் கைது.!
சென்னையை அடுத்த போரூர் இல் ஒரு நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 63 ஆயிரம் ரூபாய் பணம், 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தடைசெய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி விற்பனை போரூர் சுற்றுவட்டாரங்களில் நடந்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் ஆய்வு செய்தபோது 4 பேர் பிடிபட்டனர். இவர்கள் போரூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கூலித் தொழிலாளிகள் ஏழை அடித்தட்டு மக்களின் உழைப்பை உறிஞ்சும் இதுபோன்ற லாட்டரி விற்பனை தொடர்வதால் இதனை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகிறார்கள்.






