--- --:--:-- --

பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை..!

5

பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுவதற்கான சட்ட மசோதா இன்று பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

 

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று கேள்வி நேரம் முடிவடைந்த பிறகு சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் மகளிருக்கு எதிரான குற்றங்களுக்கு கூடுதல் தண்டனை விதிக்க வழி செய்யும் புதிய சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.

 

இந்திய தண்டனை சட்டத்தின்படி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த தண்டனை காலத்தை அதிகரிக்கும் வகையில் 7 ஆண்டுகள் தண்டனை காலம் 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

 

இந்த சட்ட மசோதா இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களுக்கு இனிமேல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon