16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 3 இளைஞர்கள்.!
நாமக்கல்லில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் சிறுமியின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது சிறுமி 3 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அத்துமீறிய 19 வயது இளைஞர்கள் இருவரையும் 27 வயது மோகன் குமாரையும் கைது செய்தனர்.
தமிழ்ச்செல்வனை சிறுமி காதலித்ததாகவும் இதையடுத்து சிறுமியிடம் அத்துமீறிய தமிழ்ச்செல்வன் அவரின் நண்பர்களுக்கும் விருந்தாக்கியது விசாரணைக்கு வெளிவந்துள்ளது. இதையடுத்து 3 பேரும் நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.






