--- --:--:-- --

விவேக் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள விஜய்..!

3

டிகர் விஜய் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் இல்லத்திற்குச் சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த நடிகர் விவேக் கடந்த 17ஆம் தேதி மறைந்தார்.

 

ஆனால் அந்த சமயத்தில் நடிகர் விஜய் தனது 65வது படத்தின் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா நாட்டிற்கு சென்று இருந்தார். இந்த நிலையில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு நேற்று சென்னை திரும்பிய நிலையில் விவேக இல்லத்திற்கு சென்று அவரின் குடும்பத்தினருக்கு ஆதரவு தெரிவித்தார்.

 

விஜய், விவேக் இருவரும் இணைந்து குஷி, ப்ரியமானவளே உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள்.

Leave a Reply

Right Menu Icon