--- --:--:-- --

ஹெல்மெட் அணியாமல் வந்த 3 மாணவர்கள் – புதுமையான தண்டனை

8

சென்னையில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த மூன்று கல்லூரி மாணவர்களுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் புதுமையான முறையில் தண்டனை வழங்கினார்.

 

பரங்கிமலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாஸ்கரன் என்பவர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக ஒரு இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் வந்ததுடன் ஹெல்மெட்டும் அணியாமலும் வந்தனர்.

 

மாணவர்களின் ஒருவருக்கு காய்ச்சல் என்பதால் அவசரத்தில் மூன்று பேரும் ஒரு இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் வந்ததாக தெரிவித்துள்ளனர்.

 

உடல்நிலை சரியில்லாத மாணவரை தானே பணம் கொடுத்து ஆட்டோவில் மருத்துவமனைக்கு அனுப்பிய பாஸ்கரன் மீதமிருந்த இரண்டு மாணவர்களை கல்லூரிக்கு அனுப்பி ஹெல்மட் எடுத்து வர வைத்து அதன் பின்னர் இரு சக்கர வாகனத்தை கொடுத்தனுப்பினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon