புதிதாக 3 மின்சார ரயில் சேவை தொடக்கம்..!
சென்னையில் புதிதாக 3 மின்சார ரயில்களின் ரயில் சேவை இன்று முதல் இயக்கப்படுகிறது. மின்சார ரயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூடுதல் மின்சார ரயில்களை இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை பரிசீலித்த ரயில்வே நிர்வாகம் புதிதாக மூன்று மின்சார ரயில் சேவையை தொடங்கவும் 5 மின்சார ரயில்களின் சேவையை நீட்டிக்கவும் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி சென்னை புறநகரில் மூன்று மின்சார ரயில் சேவை இன்று முதல் இயக்கப்படுகின்றன.
ஆவடி – சென்னை சென்றதற்கு காலை 9:00 மணிக்குள் சென்ட்ரல் திருவள்ளூருக்கு காலை 10.40 மணிக்கும், திருவள்ளூர் சென்ட்ரலுக்கு மாலை 3:50 மணிக்கும் புதிய மின்சார ரயில் சேவை இயக்கப்படுகிறது.
இதே போல சென்ட்ரல் கும்மிடிப்பூண்டிக்கு நண்பகல் 12.10 மணிக்கு இயக்கப்படும். மின்சார ரயில் சூலூர் பேட்டை வரை நீட்டித்து இயக்கப்படவுள்ளது.





