தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் காலமானார்..!
ராட்சசன், ஓ மை கடவுளே, மரகத நாணயம், ஆகிய படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளரான டில்லி பாபு காலமானார். தமிழ் திரையுலகில் பல முக்கிய படங்களை தயாரித்தவர் ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரியின் டில்லி பாபு (50).
இவர் கடந்த 2015-ம் ஆண்டு ‘உறுமீன்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார் டில்லி பாபு, அதனைத் தொடர்ந்து மரகத நாணயம், இரவுக்கு ஆயிரம் கண்கள், ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சிலர், மிரள் மற்றும் கள்வன் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.
மேலும் ராட்சசன் 2, மரகத நாணயம் 2, வளையம் ஆகிய திரைக்கு வராத படங்களை தயாரித்துள்ளார். இதுமட்டுமின்றி, பல இளம் நடிகர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு பல உதவிகளை செய்துள்ளார்.ஆனால் கடந்த சில நாட்களாகவே இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று அதிகாலை அவர் சென்னையில் காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகத்தை சேர்ந்த பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.





