இளம் பெண்ணை பலாத்காரம் செய்ததாக 3 பேரிடம் போலீஸ் விசாரணை
சேலத்தில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் தொடர்பாக 3 பேருடன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் சூரமங்கலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் அண்மையில் குபேந்திரன் என்பவருடன் கடைக்கு சென்று விட்டு திரும்பும் போது, ஒரு இடத்தில் பெண் சிறுநீர் கழிக்க இறங்கியிருக்கிறார். அப்போது அங்கு வந்த 3 இளைஞர்கள் குபேந்திரனை தாக்கி 10,000 ரூபாய், செல் ஃபோன் மற்றும் அணிந்து இருந்த நகைகளை பறித்துள்ளனர்.
மேலும் இளைஞர்களின் ஒருவன் புதருக்குள் சென்று இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் பலாத்காரம் மற்றும் வழிப்பறிவு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சூரமங்கலத்தை சேர்ந்த ஜெய பிரகாஷ் ,மணிகண்டன் மற்றும் குமார் ஆகிய 3 பேரிடம் விசாரணை நடத்துகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




