லிப்டில் சிக்கிய 3 வழக்கறிஞர்கள் திருச்சி நீதிமன்றத்தில் பரபரப்பு..!
திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள நீதிமன்றத்தில் லிப்டில் சிக்கிய இரண்டு பெண் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட மூன்று வழக்கறிஞர்கள் 30 நிமிட போராட்டத்திற்கு பின் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் மீட்கப்பட்டனர்.
லிப்ட் அருகே இருந்த கதவை உடைத்து ஏணி வழியாக வழக்கறிஞர்களை பத்திரமாக மீட்டனர்.





