--- --:--:-- --

மதுரையில் ஆவின் பால் விநியோகம் 3 மணி நேரம் தாமதம்..!

2

துரையில் ஆவின் பால் விநியோகம் 3 மணி நேரம் தாமதமானதாக கூறி ஆவின் பால் பண்ணையை முகவர்கள் முற்றுகையிட்டனர்.

 

மதுரை மாநகரின் முக்கிய பகுதிகளான வீதிக்குளம், முல்லை நகர், ராயகுளம், பூசா குளம், ஆனந்தம் நகர், பனங்காடி உள்ளிட்ட பகுதிகளில் 60க்கும் மேற்பட்ட பால் டெம்போ முகவர்களுக்கு தொடர்ச்சியாக காலை 4 மணிக்கு பால் விநியோகம் செய்யப்படுவது வழக்கம்.

 

கடந்த சில நாட்களின் தொடர்ச்சியாக இன்றும் விநியோகம் தாமதமாகிறது. இதனால் பால்விற்கும் முகவர்கள் சாலை ஓரத்திலேயே காத்து கடந்துள்ளனர். பின்னர் அவர்கள் சாந்தமங்கலம் ஆவின் பால் பண்ணையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon