--- --:--:-- --

நாவல் பழம் பறிக்க சென்ற 3 குழந்தைகள் நீரில் மூழ்கி பலி..!

6

திண்டிவனம் அருகே பள்ளி முடிந்து நாவல் பழம் பறிக்க சென்ற இரண்டு சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் ஆற்றில் மூழ்கி இறந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்த பிரியதர்ஷினி, அவரது தங்கை சுபாஷினி. அதே பள்ளியில் ஐந்தாம் வகுப்புகள் படிக்கும் சஞ்சய். ஆகிய மூவரும் பள்ளி முடிந்ததும் நாவல் பழம் பறிக்க கோனேரிகுப்பம் வரை சென்றதாக கூறப்படுகிறது.

 

அவர்களில் இருவர் கால் வழுக்கி ஆற்றில் விழுந்ததாகவும், அவரை காப்பாற்ற ஆற்றில் இறங்கிய மற்ற இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்ததாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

 

Right Menu Icon