தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்பநிலை உயரக்கூடும்..!
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அதிக பட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் சேலம், தர்மபுரி, ஈரோடு, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக மாவட்டங்களில் இரு நாட்களாக நிலவிய அதிகபட்ச வெப்பநிலை அடுத்த இரு நாட்களில் 100 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகரிக்க கூடும் எனவும் கடலோர மாவட்டங்களில் உள்ள ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை இருப்பதால் 5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.






