பள்ளிப்படிப்பை முடித்த பெண்களுக்கு 25 ஆயிரம்..! பட்டபடிப்பு முடித்த பெண்களுக்கு 50 ஆயிரம்..! முதல்வர் அறிவிப்பு..!
பீகார் மாநிலத்தில் பள்ளிப்படிப்பை முடித்த பெண்களுக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாயும், பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று அறிவிப்பு அம்மாநில மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பெண் குழந்தை திருமணத்தை தவிர்க்கவும், பெண்களின் உயர் கல்வியை ஊக்கப்படுத்தவும் பீகார் மாநிலத்தில் கன்யா யுத்தன் யோஜனா என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி பள்ளிப்படிப்பை நிறைவு செய்த பெண்களுக்கு பத்தாயிரம் ரூபாயும், பட்டப் படிப்பை நிறைவுசெய்த பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்ட வந்தது.
இந்நிலையில் 2021 – 2022 ஆம் ஆண்டில் பெண்களுக்கு வழங்கும் கல்விதொகையை முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு அதிகரித்துள்ளது. அதன்படி பள்ளிப்படிப்பை முடித்த பெண்களுக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாயும், பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.







