தமிழக காவல்துறையைச் சேர்ந்த 24 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது..!
தமிழக காவல்துறையினரின் அர்ப்பணிப்பு மற்றும் மிகச்சிறந்த சேவையைப் பாராட்டும் வகையில், இந்த ஆண்டு குடியரசுத் தினத்தை முன்னிட்டு 24 காவல்துறை அதிகாரிகளுக்கு உயரிய குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழக காவல்துறையினருக்கு மத்திய அரசால் வழங்கப்படும் இந்த விருதுகள், இந்திய காவல்துறையின் மிக உயரிய கௌரவங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஆண்டுதோறும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி இந்த விருதுகளை வழங்குகிறார்.






