தீபாவளிக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை!
நாளை மறுநாள் (நவம்பர் 8ஆம் தேதி) இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக ஜவுளி, பட்டாசு உள்ளிட்ட விற்பனைகள் ஆரம்பிக்கத் தொடங்கியுள்ளன.இந்த ஆண்டு தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால் ஒரு நாள் விடுமுறை கிடைக்காமல் போய்விட்டதே என மாணவர்களும், ஊழியர்களும் வருத்தத்தில் இருந்தனர்.
முன்னதாக தீபாவளி வரும் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட இருக்கும் நிலையில், அடுத்த நாளான 9ஆம் தேதி திங்கள் கிழமையும் விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி, நவம்பர் 7ஆம் தேதி சனிக்கிழமை, 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை (தீபாவளி) மற்றும் மறுநாள் 9ஆம் தேதி திங்கள் கிழமையையும் விடுமுறையாக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
அதன்படி 9ஆம் தேதி அனைத்து கல்வி நிலையங்கள் (பள்ளி, கல்லூரிகள்), அரசு அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், நவம்பர் 28ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாகவும் அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களுக்கு தீபாவளியையொட்டி இன்று(நவ.6) முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 10ஆம் தேதி முதல் நீதிமன்றங்கள் மீண்டும் செயல்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




