--- --:--:-- --

இன்று குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல் நிலை தேர்வு..!

2

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்நிலை தேர்வுகள் இன்று நடைபெறுகின்றன. தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பிரிவுகளைச் சேர்ந்த 846 பணியிடங்களுக்களை நிரம்புவதற்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டிருந்தது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் 4 லட்சத்து 89,885 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதன் மூலம் ஒரு பணியிடத்திற்கு சராசரியாக 579 பேர் போட்டியிடுகின்றனர்.

 

இன்று நடைபெறும் முதல்நிலை தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 1,647 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 173 தேர்வு மையங்களில் 51,721 பேர் தேர்வு எழுதுகின்றனர். இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி நண்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.

 

 

பொது அறிவு பகுதியில் 75 வினாக்கள், திறனறிவு பகுதியில் 25 வினாக்கள், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பகுதியில் 100 வினாக்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கான 200 கொள்குறி வகை வினாக்கள் இடம்பெறும் என்று TNPSC தெரிவித்துள்ளது. தேர்வு எழுதச் செல்லும் விண்ணப்பதாரர்கள் ஹால் டிக்கெட் உள்ளிட்ட தேவையான ஆவணங்களுடன் தேர்வு மையத்திற்கு உரிய நேரத்தில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon