--- --:--:-- --

சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம்!

4

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் சென்னையில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று (நவம்பர் 29) நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் பொதுமக்கள் தங்கள் வாக்காளர் விவரங்களில் தேவையான மாற்றங்களைச் செய்து கொள்ளலாம்.

 

 

சென்னை மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் இந்த சிறப்பு முகாம்கள், இன்றைய தினத்தைத் தொடர்ந்து வரும் டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளன. தகுதியுள்ள வாக்காளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தப் பணிகளை நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon