--- --:--:-- --

திமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?

02

திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் பின்வருமாறு: “பவள விழா கண்டு நூற்றாண்டை நோக்கி நடைபோடும் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் புத்தெழுச்சியைப் பெற அடுத்தகட்டப் பயணத்தில் வெற்றிகளை அடைய, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினால் அமைக்கப்பட்ட கழக மறுசீரமைப்புக் குழுவானது பல்வேறு பரிந்துரைகளைத் தலைமைக் கழகத்துக்கு வழங்கியிருக்கிறது.

 

அவற்றைக் கழகத் தலைவர் தலைமைக் கழக நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து, அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்களைத் தலைமைச் செயற்குழுவில் தீர்மானமாக முன்மொழிய இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. தமிழையும் தமிழினத்தையும் தமிழ்நாட்டையும் காக்க பேரறிஞர் பெருந்தகை அண்ணாவால் உருவாக்கப்பட்ட மாபெரும் பேரியக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். தமிழினத் தலைவர் கலைஞரால் ஐம்பதாண்டு காலம் கட்டமைக்கப்பட்டது நமது இயக்கம். இத்தனையாண்டு காலப் பயணத்தில் கழகம் நின்று நிலைபெறக் காரணம் இதன் அமைப்பு முறை ஆகும்.

 

 

கொள்கை தான் உயிர், அமைப்பு தான் உடல் என்பதை மனதில் வைத்தே இயக்கமும் தலைமையும் தொண்டர்களும் இயங்கி வருகிறோம். எத்தனையோ வெற்றி தோல்விகள், மேடு பள்ளங்கள், இழப்புகள், இடையூறுகள் ஏற்பட்டாலும் கழகத்தை அதன் அமைப்பு முறையே காத்து வருகிறது. தூக்கி நிறுத்தி வருகிறது. இத்தகைய கழகத்தை இன்னும் வலிமை பொருந்தியதாக மாற்றிட கழகத் தலைவர் இப்போது சிறப்பான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். கழகம் தொடங்கப்பட்ட நாள் முதல் இதுவரையில் 15 முறை கழக அமைப்பு ரீதியாகத் தேர்தல் நடத்தி, நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்துள்ளோம்.

 

 

இதன் தொடர்ச்சியாக 16-ஆவது கழக அமைப்புத் தேர்தலை நடத்தி நிர்வாக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட பின்வரும் தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் முன் வைக்கப்படுகிறது. இந்த தீர்மானங்கள் இயக்கத்தை வலிமையாக்கும். தொண்டர்களை உற்சாகம் அடைய வைக்கும். கிளைக் கழகங்கள்தான் நமது கழகத்தின் வலுவான கட்டமைப்புக்கு ஆணிவேர். கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகள் கிளைச் செயலாளர்கள்.

 

 

கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பில் புது ரத்தம் பாய்ச்சிட, இளம் தலைமுறையினருக்கு வாய்ப்புகளை வழங்கிட, கிளைக் கழகச் செயலாளருக்கான அதிகபட்ச வயது 45 என்றும், கிளைக் கழகச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும் என்றும் தீர்மானிக்கப்படுகிறது. தற்போது மாநகரங்களில் அடிப்படைக் கட்டமைப்பாகத் திகழ்வது வட்டக் கழகங்கள். அதனை மேலும் வலிமைப்படுத்திட புதிய அமைப்பு ஒன்றின் தேவை எழுந்துள்ளது. அதனடிப்படையில், புதிய நிர்வாக அமைப்பாக மாநகர பகுதிகளில் கிளைக் கழகம் எனும் பிரிவு தொடங்கப்பட்டு, கிளைச் செயலாளர் எனும் பொறுப்பு உருவாக்கப்படுகிறது.

 

 

45 வயதுக்கு மிகாதவர், அப்பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அப்பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும் எனத் தீர்மானிக்கப்படுகிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகரங்களில் இந்த கிளை அமைப்பானது ஏற்படுத்தப்படும். பிற மாநகராட்சிகளில் நிர்வாகச் சூழலுக்கேற்ப இதேபோன்ற கிளை அமைப்புகளை உருவாக்கிக் கொள்ளவும் வழிவகை செய்யப்படும்.

 

 

தற்போது மாநகரங்களில் அடிப்படைக் கட்டமைப்பாகத் திகழ்வது வட்டக் கழகங்கள். அதனை மேலும் வலிமைப்படுத்திட புதிய அமைப்பு ஒன்றின் தேவை எழுந்துள்ளது. அதனடிப்படையில், புதிய நிர்வாக அமைப்பாக மாநகர பகுதிகளில் கிளைக் கழகம் எனும் பிரிவு தொடங்கப்பட்டு, கிளைச் செயலாளர் எனும் பொறுப்பு உருவாக்கப்படுகிறது. 45 வயதுக்கு மிகாதவர், அப்பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

 

 

அப்பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும் எனத் தீர்மானிக்கப்படுகிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகரங்களில் இந்த கிளை அமைப்பானது ஏற்படுத்தப்படும். பிற மாநகராட்சிகளில் நிர்வாகச் சூழலுக்கேற்ப இதேபோன்ற கிளை அமைப்புகளை உருவாக்கிக் கொள்ளவும் வழிவகை செய்யப்படும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon