முதல்வர் வருகையால் ஆம்புலன்ஸ் திருப்பி விடப்பட்டதா? தமிழ்நாடு ஃபேக்ட் செக் விளக்கம்
முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் வருகைக்காக ஆம்புலன்ஸ் திருப்பிவிடப்பட்டதாக பரவும் தவறான தகவல். முதல்வர் வருவதற்காக ஒரு பக்கம் ரோட்டையே அடைத்து வைத்துள்ளனர். ஆம்புலன்ஸ் கூட அவசரத்துக்கு ஒன்வேயில் போலீஸார் திருப்பிவிட்டுள்ளனர்” என்று சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
இது முற்றிலும் தவறான தகவல்.சமூக வலைதளங்களில் பரவும் காணொலி, முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் வருகையின் போது எடுக்கப்பட்டதல்ல. இந்தக் காணொலி இந்த அரசு பொறுப்பு ஏற்பதற்கு முன்பே, அதாவது கடந்த ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




