விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் அளித்த உறுதி!
அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையிலான பயிர்க்கடன் தள்ளுபடியை முதலமைச்சர் அறிவிப்பார் என அமைச்சர்கள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக விவசாய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன், நிர்மல்குமார் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.
இதில் விவசாய சங்க பிரதிநிதிகளாக பி.ஆர்.பாண்டியன், அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளை முன்வைத்தனர். பின்னர், ஊடகங்களிடம் பேசிய அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியன், பயிர்க்கடன், நெல், கரும்பு கொள்முதல் விலை உள்ளிட்டவை குறித்து ஆலோசித்ததாகக் கூறினார். தொடர்ந்து பேசிய தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, காவிரி விவகாரத்தை குறிப்பிட்டார்.
பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு நடப்பு கூட்டத்தொடரிலேயே வெளியாகும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர். அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையிலான பயிர்க்கடன் தள்ளுபடியை முதலமைச்சர் அறிவிப்பார் என அமைச்சர்கள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக அப்போது தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




