--- --:--:-- --

எங்களுக்கு மின்சாரம் வேண்டும்… தண்ணீர் வேண்டாமா?” – மேகதாது விவகாரத்தில் சீமான் கேள்வி

5

மேகதாது அணைத் திட்டம் மற்றும் காவிரி நீர் உரிமை தொடர்பாக புதிய தமிழகம் ஏற்பாடு செய்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தின் நீர்வள உரிமை குறித்து கடுமையாகக் கருத்து தெரிவித்தார்.

 

 

அப்போது அவர், “எங்களுக்கு மின்சாரம் வேண்டும்… ஆனால் தண்ணீர் வேண்டாமா? பெரும் வெள்ளத்தைக்கூட தாங்கிவிடலாம்; வறட்சியை எப்படி தாங்குவது? தண்ணீர் இல்லாமல் எப்படி வாழ்வது? நம்முடைய நெய்வேலி நிலக்கரி, மீத்தேன் வளம், அணு உலை மின்சாரம் எல்லோருக்கும் கிடைக்கிறது. ஆனால் நமக்கான நீர்வளம் மட்டும் அவர்களுக்கே என்ற நிலையை எத்தனை காலம் சகித்துக் கொள்வது?” என்று கேள்வி எழுப்பி, காவிரி நீர் உரிமையைப் பாதுகாக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon