--- --:--:-- --

கூடுதல் விலைக்கு மது விற்றால் கடும் நடவடிக்கை: டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை

10

டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வோர் மீதான நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் நந்தகுமார் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

 

அதன்படி, முதல்முறை தவறு செய்வோர் 1 மாதமும், 2ஆம் முறை தவறு செய்வோர் 3 மாதமும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுவர்; 3ஆம் முறையும் தவறு செய்தால், உடனடியாகத் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு குற்றக் குறிப்பாணை வழங்கப்படும். மேலும், 10 ரூபாய் மற்றும் அதற்கு மேல் கூடுதலாக வைத்து விற்பனை செய்தால் ₹10,000 அபராதம் விதிக்கப்படும்.

 

 

இந்த அபராதத் தொகையில் 60 விழுக்காட்டை விற்பனை செய்த பணியாளரும், 40 விழுக்காட்டை மேற்பார்வையாளரும் செலுத்த வேண்டும் என அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon