சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் மரணம்..!
திருமதி செல்வம், சிறகடிக்க ஆசை உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வந்த பிரபல நடிகர் ஜெயமணி காலமான செய்தி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல விஜய்தொலைக்காட்சியில் ஹிட் சீரியலாக ஒளிப்பரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு. எப்போது ரோகிணி மாட்டுவார் என்று கதை நகர்ந்த நிலையில், அதில் ரோகிணிக்கு மலேசியா மாமாவாகவும், கதையில் கறிக்கடைக்காரராகவும் நடித்தவர் தான் நடிகர் ஜெயமணி.
இவர் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பான “திருமதி செல்வம்” சீரியலில் பூங்காவனம் கேரக்டரில் பலருடைய மனதையும் கவர்ந்தவர் தான். ஜெயமணி நடிப்பை தாண்டி சுமார் 40 சீரியல்களை இயக்கி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் பல நாடகங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதுமட்டுமின்றி ஆர்ஜே பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ள “சொர்க்கவாசல்” என்ற திரைப்படத்தில் நல்ல கேரக்டரில் நடித்திருக்கிறார். நடிகர், இயக்குனரை தாண்டி, இவர் நடிகர் சங்கம் மற்றும் டப்பிங் யூனியன் உறுப்பினராகவும் இருந்துள்ளார். அதேபோல் ஜெயமணியின் மனைவி மாலதி டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக இருக்கிறார். இவர்களின் மகள் நந்தினி டீச்சராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் ஜெயமணி திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் காலமானார். அவரது மறைவுக்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து இருக்கின்றனர். மேலும் ரசிகர்களும் உருக்கமாக சமூக வலைத்தளங்களில் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




