திருவண்ணாமலையில் கிரிவலம் முடிந்து திரும்பிய பக்தர்கள்: ரயிலில் இடம் பிடிக்க முண்டியடித்ததால் பரபரப்பு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
கிரிவலம் நிறைவடைந்ததை அடுத்து, பக்தர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்புவதற்காக ரயில் நிலையத்தில் அதிகளவில் குவிந்தனர். அப்போது கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த போலீசார் அமைத்திருந்த தடுப்புக் கயிறுகளையும் தாண்டி, ரயிலில் இடம் பிடிப்பதற்காக பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு ஏறியதால் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




