சிறைச்சாலை தி.மு.க.விற்கு புதிது கிடையாது: கனிமொழி எம்.பி. பேட்டி
நீதிமன்ற காவலில் பாளையங்கோட்டை சிறையில் உள்ள தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை திமுக எம்.பி. கனிமொழி சந்தித்தார். அதன்பின் செய்தியாளர்களுக்கு கனிமொழி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தி.மு.க.விற்கு சிறைச்சாலை புதிது கிடையாது. வழக்குகள், கைதுக்கு திமுக அஞ்சாது. திமுகவினர் பாளையங்கோட்டை சிறைக்கு வருவதைப் பெருமையாகக் கருதுவர். புகார் குறித்து விசாரிக்க கூட அரசு தயாராக இல்லை.
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனனையும் சிறையில் அடைக்க முயற்சித்தனர். ஜனநாயகத்தின் மீது அக்கறை இல்லாமல் செயல்படுகிறது தவெக அரசு. எதிர்க்கட்சிகளை அடக்கவே காவல்துறை முயற்சிக்கிறது.
திமுக ஆட்சியில் இருந்தபோது இதுபோன்ற நடவடிக்கை இல்லை. பாஜக பெயரை சொல்ல தயக்கம் காட்டுகிறது. கொள்கையை ஒருபோதும் திமுக விட்டுக் கொடுக்காது. அதிமுக, திமுக ஒருபோதும் நெருங்கி வந்தது கிடையாது. தமிழ்நாட்டின் உரிமைக்கு எல்லா கட்சிகளும் ஒரே குரலில் பேச வேண்டும் என தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




