--- --:--:-- --

இ.பி.எஸ் மற்றும் சி.வி.சண்முகம் ஆதரவாளர்களிடையே கடும் மோதல்

10

விழுப்புரம் மாவட்டம் நாட்டார் மங்கலத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட செயலாளர் பசுபதி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற இருந்தது.

 

இந்த நிலையில் சி.வி.சண்முகம் இல்லாமல் ஆலோசனைக் கூட்டம் நடைபெறக் கூடாது என்று அவரது ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறு மண்டபத்தில் திரண்டு முழக்கமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கை கலப்பாக மாறியது. இரு தரப்பும் ஒருவருக்கு ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon