முதல்வர் விஜயின் கரூர் பயணத்திற்கு தடை இல்லை; தி.மு.க மனு தள்ளுபடி!
தமிழக முதல்வர் விஜய் கரூர் செல்ல தடை விதிக்கக் கோரி திமுக சார்பில் தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விசாரணையின் போது, ஒரு மாநிலத்தின் முதல்வரின் பயணத்தை நீதிமன்றம் எவ்வாறு கட்டுப்படுத்த அல்லது முறைப்படுத்த முடியும் என்று திமுக தரப்பு வழக்குரைஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
போதுமான சட்ட அடிப்படை இல்லாததால் மனுவை ஏற்க முடியாது எனக் கூறிய நீதிமன்றம், முதல்வர் விஜயின் கரூர் பயணத்திற்கு எந்தவித தடையும் இல்லை என்று தெளிவுபடுத்தியது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




