--- --:--:-- --

ஜூன் 12 மேட்டூர் அணை திறக்கப்படுமா?

10

கொள்முதல் செய்த நெல்லுக்கு விவசாயிகளுக்கு 45 நாட்களை கடந்தும் பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை. இதனால் விவசாயிகள் மிகப் பெரும் சிரமத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் கூறியுள்ளார். மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய, , காவிரி டெல்டா மாவட்டங்களில் ஜுன்12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு குருவை சாகுபடி மேற்கொள்ளப்பட வேண்டும்.

 

 

சென்ற ஆண்டு 6.50 லட்சம் ஏக்கரில் குருவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. தற்போது மேட்டூர் அணையில் 80 அடி தண்ணீர் உள்ள நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடகாவிடம் உரிய நீரை பெற தமிழக அரசு அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நெல் விதைகளில் கலப்படம் உழைப்புத் திறனற்ற விதைகள் விற்பனை உள்ளிட்ட மோசடி நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேளாண்துறை முன்வர வேண்டும். தரமான விதைகள் விற்பனையை உறுதிப்படுத்த வேண்டும்.

 

திருநெல்வேலி, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தற்போது அறுவடை பணிகள் முடிவுற்றுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு கொள்முதலுக்கான ஒப்பந்தம் செய்துள்ளது. இவ்வமைப்போடு முந்தைய அரசின் துணையோடு பணப்பரிமாற்றமோ, அடிப்படைக் கட்டமைப்போ இல்லாத இடைத்தரகர்கள் ஒப்பந்தத்தை தனியார் நிறுவனம் பெற்றுள்ளது. இதனால், கொள்முதல் செய்த நெல்லுக்கு விவசாயிகளுக்கு 45 நாட்களை கடந்தும் பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை.

 

இதனால் விவசாயிகள் மிகப் பெரும் சிரமத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசு பொறுப்பேற்று உடனடியாக உரிய தொகை விவசாயிகளுக்குவிடுவிக்க முன்வர வேண்டும். தனியார் இடைத்தரகர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு டீசல், பெட்ரோல் விலை லிட்டர் 1க்கு ரூ 3.10 வரையிலும் திடீரென உயர்த்தப்பட்டிருப்பது மிகப்பெரும் பாதிப்பை உருவாக்கும். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயரும். எனவே மத்திய அரசு உடனடியாக விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும். டிஏபி யூரியா பொட்டாஷ் போன்ற உரங்கள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.

 

 

தேவையான உரங்களை முன்கூட்டியே இறக்குமதி செய்து இறுப்பு வைத்திட வேண்டும்.இணை இடுபொருள் பெற்றால்தான் டிஏபி, யூரியா உள்ளிட்ட உரங்கள் பெற முடியும் என்கிற அடிப்படையில் ஒரு மூட்டை யூரியா டிஏபிக்கு ரூ.700 வரை கூடுதல் செலவு செய்ய வேண்டி உள்ளது. எனவே, இதனை தடுத்து நிறுத்த மத்திய உரத்துறை அமைச்சகத்தோடு பேச்சுவார்த்தை நடத்தி உற்பத்தி நிறுவனங்கள் கட்டாய இணை இடுபொருள் விற்பனையை தடுத்து நிறுத்திட வேண்டும். மாறாக வணிக நிறுவனங்களை அச்சுறுத்துவது தீர்வு காண இயலாது என்று கூறியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon