காதல் தான் எல்லாமே என்றில்லை, ஆனால்.. – நடிகை த்ரிஷா
நடிகை த்ரிஷா சமீபத்தில் விஜய் உடன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஜோடியாக கலந்துகொண்டது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.விஜய்யின் மனைவி சங்கீதா தொடர்ந்த விவாகரத்து வழக்கில், ‘விஜய் கடந்த பல வருடங்களாக ஒரு நடிகை உடன் தொடர்பில் இருக்கிறார்’ என குறிப்பிட்டு இருந்தார். அதை தொடர்ந்து விஜய் – த்ரிஷா ஜோடியாக வந்தது பரபரப்பை ஏற்படுத்த, அவர்களை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில் காதல் பற்றி நடிகை த்ரிஷா இன்ஸ்டாக்ராமில் பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். “காதல் தான் எல்லாமே என்றில்லை. ஆனால் காதல் இல்லாமல் எதுவுமே அர்த்தம் இல்லை” என த்ரிஷா பதிவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




