--- --:--:-- --

இறக்கம் கண்ட தங்கம் விலை..!

1

மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்றத்தை சந்தித்தது. பிறகு நடுவில் தொடர்ச்சியாக குறைந்து வந்த தங்கம் விலை ஏற்ற இறக்கமாக உள்ளது. இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலை ஓரளவுக்கு சரிந்து வருவதால், நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்து வந்தனர். என்னதான் நகை விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்தாலும் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்திற்குள்ளேயே சுற்றி வருகிறது.

 

நேற்று மட்டுமே தங்கம் விலை 2 முறை மாற்றம் செய்யப்பட்டது. காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் அதிரடியாக உயர்ந்தது. அதன் படி நேற்று மாலை நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ரூ.1,10,160க்கும், கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ரூ.13,770க்கும் விற்பனையானது. தொடர்ந்து இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.13,670க்கும் சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,09,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.11,460க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.91,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.250க்கும், ஒரு கிலோ ரூ.2,50,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon