--- --:--:-- --

திமுகவுடன் இருக்க கஷ்டமென்றால் காங்கிரஸ் கட்சி தனியாக நிற்கலாமே? – சீமான்

2

திமுகவுடன் இருக்க கஷ்டமாக இருந்தால் காங்கிரஸ் கட்சி தனியாக நிற்க வேண்டியதுதானே என்றும் கூடுதல் சீட் கேட்டு பேரமாக நடக்கிறது என்றும் சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்தார். சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- “திருவண்ணாமலை உள்பட எல்லா இடத்திலும் தீபத்தை மலை உச்சியில் ஏற்றுவதுதான் வழக்கம்.

 

தமிழக அரசு கையாண்ட முறையை நீதிமன்றம் கண்டித்திருப்பதை கவனிக்க வேண்டும். இந்த பிரச்சனையே உருவாகி இருக்காது. 2 சமய வழிபாட்டை அவரவர் பிரச்சனை இல்லாமல் செய்ய வேண்டும் என்று சமூக நல்லிணக்கக் குழு அமைத்து அறநிலையத் துறை ஏற்ற வேண்டும் என்று அப்போதே செய்திருந்தால், பிரச்சனையே வந்திருக்காது.

 

 

பல ஆண்டு காலமாக விளக்கு ஏற்றப்பட்ட முறை நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் வேண்டும் என்று கேட்கிறார்கள். தேர்தல் நேரத்தில் விளக்கேற்ற பிரச்சனை செய்வது வாக்கை குறித்து செய்யப்படுகிறது. உண்மையில் இறை வழிபாட்டிற்காக பிரச்சனை செய்யவில்லை எனத் தெரிகிறது. ஒற்றுமையாக வாழும் தமிழ் சமூகத்திற்கு இடையே தேர்தல் ஆதாயத்திற்காக செய்வதை எப்படி ஆதரிக்க முடியும்? இதில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி பிரச்சனையே உருவாகாமல் செய்திருக்கலாம்.

 

கரூர் சம்பவத்தில் விஜய்யிடம் சிபிஐ விசாரணை என்பது தவிர்க்க முடியாது. தங்கள் மீது எந்த தவறும் இல்லை என்றால், விசாரணையில் தெளிவுபடுத்தினால் சரியாகப் போகிறது. எனக்குத் தராத அழுத்தம் வேறு யாருக்காவது வந்திருக்குமா? எத்தனை அழுத்தம் வந்தாலும் நாம் தான் முடிவு எடுக்க வேண்டும்.

 

தேசிய இன வாழும் ஐக்கியத்தில் பிற இனத்தினரைப் பகைவர்களாக மாற்றிக்கொண்டு வெல்ல முடியாது. நாம் தமிழர் கட்சி எல்லா மக்களுக்கும். தலைமை அதிகாரம் தமிழருக்கு மட்டும். சவுராஷ்டிராவை சேர்ந்த 2 பேருக்கு சீட் தந்துள்ளேன். எல்லாருக்கும் சீட் தந்ததை பேசவில்லை. விஜய் கூட்டணியை விரும்புகிறார். இதனால் வரும் கட்சிகளை சேர்த்துக்கொள்கிறார். நான் கூட்டணியை விரும்பவில்லை. இதனால் கூட்டணிக்கு போகவில்லை. விஜய் ஆட்சியில் பங்கு என்று சொல்கிறார். அதை பற்றி நான் பேச முடியாது.

 

விஜய்யுடன் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் கூட்டணி வைக்கப் போவது அவர்களுடைய விருப்பம். இதில் யாரும் கருத்து சொல்ல முடியாது. திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்து இருப்பது வெறுப்பாக உள்ளது. திமுக தானே மாணிக் தாகூரை ஜெயிக்க வைத்தார்கள். திமுகவுடன் இருப்பது கஷ்டமாக இருந்தால், காங்கிரஸ் கட்சி தனியாக சென்று நிற்க வேண்டியதுதானே. கூடுதல் தொகுதி கேட்க பேரம் செய்ய வாய்ப்பாக இருக்குமே தவிர வெளியே வரமாட்டார்கள்.
ஓய்வூதிய திட்டம், லேப்டாப் வழங்குவது போன்ற செயல்களை கேவலமாகப் பார்க்கிறேன். இதை வெறுக்கிறேன். கட்சிகள் தேர்தல் அரசியல் தான் செய்கிறது. மக்கள் அரசியலை செய்யாது. சேவை அரசியல் செய்யாது. பழைய ஓய்வூதிய திட்டத்தை தான் கேட்டார்கள்.

 

தேர்தல் வருவதால் பொங்கல் தொகை அறிவித்துள்ளார்கள். ஏற்கனவே கடன் இருக்கும் போது ரூ.7 ஆயிரம் கோடி செலவிடுவது தேர்தல் அரசியல். மாணவர்களுக்கு மடிக்கணினியை கடந்த ஆண்டு தந்திருக்கலாம். அரசு விழாக்களில் நடிகர்களை அழைத்து பேச விடுவது நடிகர்கள் நாடு ஆளுவது தவிர்க்க முடியாமல் போய் விடுகிறது.
மக்களை பற்றி கவலைப்பட்டால் வாக்குகள் தானாக வந்து விடும். தேர்தல் வரும் நேரத்தில் திட்டங்களை அறிவித்து வாக்குகளைப் பெறலாம். பீகாரில் பா.ஜ.க. ரூ.10 ஆயிரம் தந்தது. இதற்கும் அதற்கும் வேறுபாடு உள்ளதா?

 

இது அரசு கிடையாது. கமிஷன் மண்டி. கமிஷன் வாங்காமல் இருக்க முடியாது. இதை ஒழிக்க முடியாது. மொத்தமாக துடைத்து எறிய வேண்டும்.பொங்கலுக்கு ரூ.3 ஆயிரம் தந்தால் எப்படி பணம் வரும்? மின்சார கட்டணம், சொத்து வரி ஆகியவை உயர்த்த வேண்டும். பால் விலையை உயர்த்த வேண்டியதுதான். சம வேலை, சம ஊதியம் கேட்டு ஆசிரியர்கள், கொரோனா காலத்தில் இருந்த சேவை பெண்கள் வீதியில் நிற்கிறார்கள். கேட்டு போராடும் அவர்களுக்கு தர மறுக்கிறீர்கள். மாதம் உரிமை தொகை கேட்டு வந்தார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon