--- --:--:-- --

இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு… மத்திய அரசு அதிரடி உத்தரவு

4

2009 முதல் இதுவரை அமெரிக்கா மொத்தம் 18,822 இந்தியர்களை நாடு கடத்தியுள்ளது. இதில், 2025 ஜனவரி முதல் இதுவரை 3,258 பேர் நாடு கடத்தப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வியாழக்கிழமை மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

 

மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வ பதில் அளித்த ஜெய்சங்கர், இந்த ஆண்டு நாடு கடத்தப்பட்ட 3,258 பேரில் 2,032 பேர் அதாவது 62% பேர் வழக்கமான வணிக விமானங்களில் அனுப்பப்பட்டதாக கூறினார். மீதமுள்ள 1,226 பேர், அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கம் (ICE) அல்லது சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு (CBP) சார்ட்டர் விமானங்களில் நாடு கடத்தப்பட்டனர்.

 

நாடு கடத்தல் செயல்முறையில் மனிதாபிமான சூழல் உறுதி செய்ய நடவடிக்கைஇந்திய நாட்டு பிரஜைகள் நாடு கடத்தப்படும்போது, அவர்கள் மனிதாபிமானத்துடன் நடத்தப்படுவதை உறுதி செய்ய, வெளியுறவு அமைச்சகம் அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

 

பெண்கள் மற்றும் குழந்தைகள்மீது கட்டுப்பாடுகளைப் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்பதையும் இந்தியா தெளிவாக வலியுறுத்தியுள்ளது. ஜெய்சங்கர் மேலும் தெரிவிக்கையில், பிப்ரவரி 5ஆம் தேதியன்று நாடு கடத்தல் விமானத்திற்குப் பிறகு, பெண்கள் அல்லது குழந்தைகள் மீது கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தியதாக எதுவும் பதிவாகவில்லை.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon