--- --:--:-- --

இயற்கை விவசாயிகள் மாநாடு தொடக்க விழா..!

2

கோவை கொடிசியா வளாகத்தில் இன்று (19ஆம் தேதி) முதல் 3 நாட்களுக்கு தென் மாநில இயற்கை விவசாயிகள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை தொடங்கி வைக்கவுள்ள பிரதமர் மோடி, சிறந்த விவசாயிகள் 18 பேருக்கு விருதுகளையும் வழங்கவுள்ளார்.

 

இதற்காக, இன்று நண்பகல் 12.30 மணிக்கு ஆந்திராவில் உள்ள புட்டபர்த்தியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட பிரதமர், பிற்பகல் 1:25 மணியளவில் கோவை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.
அங்கு, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் பிரதமர் மோடியை வரவேற்றனர்.

 

விமான நிலையத்தில் இருந்து நிகழ்ச்சி நடக்கும் கோவை கொடிசியா வளாகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி காரில் சென்றார். அவர் செல்லும் வழி முழுக்க பாஜக, அதிமுக மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூடி நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விமான நிலையத்தில் இருந்து காரில் பயணித்து 1:40 மணியளவில் கொடிசியா வளாகத்திற்கு வந்து மாநாட்டில் பங்கேற்றுவிட்டு, மாலை 3:15 மணிக்கு கொடிசியாவில் இருந்து புறப்பட்டு 3:30 மணிக்கு விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து டெல்லிக்கு செல்வார் என கூறப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon