--- --:--:-- --

13% மசோதாக்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பு – ஆளுநர் மாளிகை

10

ந்திய அரசியலமைப்பு விதிகளின்படி தமிழ்நாடு ஆளுநர் செயல்பட்டு வருகிறார். தமிழக மக்களின் நலன்களைப் பாதுகாக்க, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த கவனத்துடன் ஆய்வு செய்கிறார். மக்கள் நலனுக்கு எதிரான சில ஆதாரமற்ற, உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

 

நேர்மை, வெளிப்படைத்தன்மை, அர்ப்பணிப்புடன் அரசியலமைப்பு கடமைகளைச் செய்து வருகிறார் ஆளுநர். 13% மசோதாக்கள் குடியரசுத்தலைவரின் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. 13% மசோதாக்களில் 60% மாநில அரசின் பரிந்துரையின் பேரில் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

மீதமுள்ள மசோதாக்கள் அக்டோபர் 2025 கடைசி வாரத்தில் பெறப்பட்டு பரிசீலனையில் உள்ளன. 13% மசோதாக்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.” என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon