சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்கள்
தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்காகச் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியைக் கடந்து 54,509 வாகனங்கள் சென்றுள்ளன. மேலும், கடந்த மூன்று நாட்களில் மொத்தம் 1.22 லட்சம் வாகனங்கள் இந்தச் சுங்கச்சாவடியைக் கடந்து சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




