--- --:--:-- --

ஆப்ரேஷன் சிந்தூர் : நாடாளுமன்றத்தில் 16 மணி விவாதம் இன்று தொடக்கம்

1

டந்த வார திங்கட்கிழமை, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது முதல், ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்கக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் 16 மணி நேரம் விவாதம் நடத்த மத்திய அரசு ஒப்புக் கொண்டது.

 

மக்களவையில் அமைச்சர் ராஜ்நாத் சிங் விவாதத்தை தொடங்கி வைக்கும் நிலையில், அவரை தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் விளக்கம் அளிக்க உள்ளனர். அப்போது, பிரதமர் மோடியும் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் அளிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

 

ஆப்ரேஷன் சிந்தூர், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீடு உள்ளிட்டவை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க காங்கிரஸ் முனைப்பு காட்டி வருகிறது. அதே சமயம், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை பற்றி விவாதிக்கவில்லை என்றால், தங்கள் வாக்கு வங்கிகள் கடுமையாக பாதிக்கப்படும் என திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கவலை அடைந்துள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon