--- --:--:-- --

பரமக்குடி – ராமநாதபுரம் நான்கு வழிச் சாலை

5

துரை – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் பரமக்குடி-ராமநாதபுரம் இடையே 1,853 கோடி ரூபாயில் 46.7 கி.மீ தூரம் 4 வழிச் சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 

 

அதில், தமிழ்நாட்டில் பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச் சாலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.மதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம், ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி இடையேயான இணைப்பு, தற்போதுள்ள இரு வழி தேசிய நெடுஞ்சாலை 87 மற்றும் அதனுடன் தொடர்புடைய மாநில நெடுஞ்சாலைகளைச் சார்ந்துள்ளது.

 

குறிப்பாக மக்கள்தொகை அடர்த்தியான பகுதிகள் மற்றும் வழித்தடத்தில் உள்ள முக்கிய நகரங்களில் அதிக போக்குவரத்து நெரிசலை இந்த நெடுஞ்சாலைகள் சந்தித்து வருகின்றன.

 

இந்த சவால்களை எதிர்கொள்ள, பரமக்குடி முதல் ராமநாதபுரம் வரை சுமார் 46.7 கி.மீ. NH-87 ஐ 4 வழித்தடமாக மேம்படுத்தப்படவுள்ளது. இது தற்போதுள்ள வழித்தடத்தில் நெரிசலைக் குறைக்கும், பாதுகாப்பை மேம்படுத்தும் மற்றும் பரமக்குடி, சத்திரக்குடி, அச்சுந்தன்வயல் மற்றும் ராமநாதபுரம் போன்ற வேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யும்.

 

இந்த திட்ட சீரமைப்பு 5 முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் (NH-38, NH-85, NH-36, NH-536 மற்றும் NH-32) மற்றும் 3 மாநில நெடுஞ்சாலைகள் (SH-47, SH-29, SH-34) ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, தெற்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய பொருளாதார, சமூக மற்றும் தளவாட முனையங்களுக்கு தடையற்ற இணைப்பை வழங்க உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon