பிரபல பிக்பாஸ் நடிகை திடீர் மரணம்..!
பாலிவுட்டில் கொடிகட்டிப் பறந்த நடிகை ஷெஃபாலி ஜரிவாலா திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நேற்று உயிரிந்த சோகம் திரைப்பிரபலங்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும் , ஆழ்ந்த சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரின் கான்டா லகா கேர்ள் என்கிற பாடல் இந்தியா முழுவதும் பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்ததை யாராலும் மறக்க முடியாது.
47 வயதான இவர் திடீரென நேற்று தனது மும்பை வீட்டில் இருந்த போது நெஞ்சு வலி இருப்பதாகக் கூறியுள்ளார். உடனே அவருடைய கணவர் பராக் தியாகி அந்தேரியில் உள்ள பிரபல பல்நோக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மருத்துவர்களின் பலகட்ட சிகிச்சைகளுக்குப் பின்பும் அவரை காப்பாற்ற முடியாமல் போனதால் இறந்ததாக மருத்துவர்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கின்றனர்.
ஷெஃபாலியின் நெருங்கிய நண்பர்கள் வட்டாரத்தில் அவர் மருத்துவமனை வரும் முன்னரே இறந்ததாக கூறுகின்றனர். ஷெஃபாலி ரோஸ் நடித்து 2002 ஆம் ஆண்டு வெளியான ’கான்டா லகா கேர்ள்’ பாலிவுட்டை மட்டுமன்றி இந்தியா முழுவதுமே ஒரு புயல் வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அதுமட்டுமன்றி அவரின் சிஸ்லிங் ரீமிக்ஸ் வீடியோ பாப் கலாச்சாரத்தில் பெரும் வரவேற்ப்பு பெற்றது. பின் முஜிசே ஷாதி கரோங் என்னும் படத்திலும் அவர் நடித்திருந்தார். பின் அவர் மிகவும் அறியப்பட்ட பிரபல நாயகியாக வலம் வந்தார்.அதனைத் தொடர்ந்து அவர் ’பிக் பாஸ் 13’ மற்றும் நாச் பாலியே சீசன் 5 மற்றும் 7 ஆகிய ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் போட்டியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி உச்சம் தொட்ட நடிகையாக வலம் வந்துக்கொண்டிருந்த ஷெஃபாலி திடீரென நேற்று மாரடைப்பு காரணமாக இறந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரின் இறப்பு செய்தி கேட்ட பிரபலங்கள் பலர் இன்ஸ்டாகிராமில் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




