--- --:--:-- --

சென்னையில் இரவு பெய்த மழை..!

3

மிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வரும் 26ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 22ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையில் மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு எனத் தெரிவித்துள்ள வானிலை மையம், ஒருசில இடங்களில் வெப்பநிலை சற்று உயரக்கூடும் எனக் கணித்துள்ளது.

 

மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வரும் 26ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தமட்டில் சனிக்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு, வடக்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும் என்பதால், வரும் 24ஆம் தேதி வரை குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon