--- --:--:-- --

முருக பக்தர்கள் மாநாட்டு வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

1

முருக பக்தர்கள் மாநாட்டு வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்குவதற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி மறுத்துவிட்டது. அரசு பாண்டி என்பவர் தாக்கல் செய்த மனுவில், மதுரை வண்டியூரில் வரும் 22 ஆம் தேதி முருக பக்தர்கள் ஆன்மிக மாநாடு நடைபெறுகிறது என்றும் இந்த மாநாட்டுக்கு வருவோர் அந்தந்த உட்கோட்ட டிஎஸ்பியிடம் வாகன பாஸ் பெற வேண்டும் என்பது நிபந்தனைகளில் ஒன்றாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

ஆகவே, கொடைக்கானல், ஊட்டி போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வாகனங்களுக்கு ஆன்லைன் வழியாக இ-பாஸ் வழங்கப்படும் முறையை முருக பக்தர் மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்கும் பின்பற்றினால் பாஸ் பெறுவது எளிதாக இருக்கும் எனத் தெரிவித்தார்.இதனால் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்கு ஆன்லைன் வழியாக இ-பாஸ் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் தமது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

 

அதனை விசாரித்த நீதிபதி புகழேந்தி, முருக பக்தர்கள் மாநாட்டுக்கு ஆன்லைன் முறையில் பாஸ் வழங்க முடியாது என்றும், வரும் 21-ஆம் தேதி காலை 10 மணி வரை முருகன் பக்தர்கள் மாநாட்டுக்கான வாகன பாஸ்களை அந்தந்த டிஎஸ்பி அலுவலகத்தில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon