சென்னை-நெல்லை இடையே சிறப்பு ரயில்..!
வார இறுதி நாட்கள் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, வரும் 21, 22 ஆகிய தேதிகளில் சென்னை – நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை சிறப்பு ரயில், சென்னையில் இருந்து 21ஆம் தேதி இரவு 09.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 08.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மறு மார்க்கத்தில் திருநெல்வேலியில் இருந்து 22-ஆம் தேதி இரவு 09.40 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 08.15 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், சோழவந்தான், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
இந்த ரயில்களுக்கான பயணச் சீட்டு முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு துவங்குகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




