அருவியில் குளித்தவர்களை அலறவிட்ட பாம்பு..!
உத்தரகாண்ட், முசோரி கெம்ப்டி அருவியில் ஒரு பாம்பு பதற வைத்துள்ளது. சுற்றுலா பயணிகள் ஜாலியாக ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த போது, தண்ணீரில் ஒரு பெரிய பாம்பு வர, மக்கள் பயத்தில் அங்குமிங்கும் சிதறி ஓடினர்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பாம்பை கண்டு ஓடிய மக்கள், ஒருவர் மேல் ஒருவர் விழுந்து ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும் என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




