வீரத்தின் அடையாளம்: வீட்டில் சிந்தூர் மரக்கன்றை நட்ட பிரதமர்
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, டெல்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ வீட்டில் சிந்தூர் மரக்கன்றை நட்டார். 1971 இந்தியா – பாக். போரின் போது, வீரத்தின் முன்மாதிரியாக அமைந்த குஜராத்தின் கட்ச் பகுதி பெண்கள் இந்த மரக்கன்றை தனக்கு பரிசளித்ததாகவும், நமது நாட்டு பெண் சக்தியின் வீரம் மற்றும் உத்வேகத்தின் வலுவான அடையாளமாக இந்த செடி இருக்கும் என்றும் பிரதமர் உணர்வு பொங்க தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




