தங்க நகைக் கடன்களுக்காக RBI விதித்த புதிய விதிமுறைகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அதிருப்தி தெரிவித்துள்ளார். நகையின் மதிப்பில் முன்பை விட 5% குறைத்து, 75% தான் கடன் வழங்கப்படும் என்ற புதிய விதி சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருப்பதாக ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
அவசர தேவைக்காக வங்கிகளை நாடி வரும் மக்களை பாதிக்கும் இந்த விதிகளை RBI உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.