விஜயை பார்க்க சென்ற காவலர் அதிரடியாக சஸ்பெண்ட்..!
த.வெ.க., தலைவர் விஜயை பார்ப்பதற்காக பணி நேரத்தில் சென்ற காவலர் அதிரடியாக ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார். மதுரை தெப்பக்குளம் குற்றப்பிரிவு காவலராக பணியாற்றி வரும் கதிரவன் மார்க்ஸ், விளக்குத்தூண் ஸ்டேஷனில் மாற்றுப்பணியில் இருந்தார். நேற்று முன்தினம் மதியம் மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் சித்திரைத் திருவிழாவில் அவருக்கு பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டிருந்தது.
அச்சமயத்தில் சினிமா படப்பிடிப்பிற்காக சென்னையில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு த.வெ.க., தலைவர் விஜய் வருகை தந்தார். அதனால் விஜயை பார்ப்பதற்காக பணி நேரத்தில் அனுமதி கேட்டு சென்ற காவலர், சீருடை இல்லாமல் கட்சிக்கொடி அணிந்துகொண்டு விஜய்யை வரவேற்றுள்ளார்.
இதுகுறித்த வீடியோ வைரலாகி விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த வீடியோ ஆணையர் லோகநாதனின் பார்வைக்கு சென்றதை தொடர்ந்து, கதிரவன் மார்க்ஸ் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




