--- --:--:-- --

மீனவர்கள் படகு மீது மோதிய சரக்கு கப்பல்!

9

கன்னியாகுமரியின் முட்டம் அருகே தனியார் மீன்பிடி துறைமுகத்தில் படகு மீது கப்பல் மோதியது. கடியப்பட்டணத்தைச் சேர்ந்த அருள் ரமேஷ் என்பவரின் விசைப்படகில் 21 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

 

சுமார் 22 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது பெரிய சரக்கு கப்பல் ஒன்று படகு மீது மோதியது. நல்வாய்ப்பாக மீனவர்கள் காயமின்றி உயிர் தப்பிய நிலையில், மீன் பிடிக்காமல் கரைக்கு திரும்பியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon