ஆம்னி பஸ் கட்டணம் திடீர் அதிகரிப்பு.. பயணிகள் அவதி
தமிழ் புத்தாண்டு விடுமுறையை சொந்த ஊரில் கொண்டாட சென்ற மக்கள் மீண்டும் சென்னைக்கு இன்று திரும்பவுள்ளனர். வழக்கமாக நெல்லை-சென்னைக்கு ஆம்னி பஸ்களில் ரூ.1,100 கட்டணம் வாங்கப்படும்.
ஆனால் தற்போது டிக்கெட் முன்பதிவு செயலியில் ரூ.2,430, ரூ.2,570 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாகர்கோயில்-சென்னை, மதுரை-சென்னை கட்டணமும் 2 மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




