--- --:--:-- --

பத்திரப் பதிவுக் கட்டணம் குறைவு..!

2

பெண்கள் பெயரில் வீடு, நிலம் பதிந்தால் 1% பத்திரப் பதிவுக் கட்டணம் குறைக்கப்படும் என்ற அறிவிப்பை தமிழக சட்டப்பேரவையில் 2025-26 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தபோது, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டிருந்தார்.

 

பெண்களுக்கு சொத்துரிமையில் சமபங்கை உறுதி செய்வதற்காக, அவர்கள் பெயரில் சொத்துக்கள் மற்றும் விளைநிலங்களைப் பதிவு செய்யும்போது பதிவுக் கட்டணத்தில் சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

 

குறிப்பாக, 10 லட்ச ரூபாய் வரையிலான வீடு அல்லது நிலத்தை பெண்கள் பெயரில் பதிவு செய்தால், பதிவுக் கட்டணத்தில் 1% குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நடைமுறையானது இன்று முதல் அமலுக்கு வரும் என்றும் நிதி நிலை அறிக்கை தாக்கலின்போது அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon