--- --:--:-- --

மும்மொழி கொள்கை குறித்து சர்ச்சை பேச்சு – தா.மோ. அன்பரசன்

4

சென்னை பல்லாவரத்தில் இந்தியா கூட்டணி இன் சார்பாக பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் இந்தி மொழி குறித்து விமர்சித்துள்ளார். அவர் பேசியதாவது, “மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு அறிவிக்கிறது.

 

அண்ணாவின் இரு மொழிக் கொள்கையால் தான் தமிழர்கள் உலகம் முழுவதும் பரவி கிடப்பதாக அமைச்சர் கூறினார். தமிழ்நாட்டில் சுயமரியாதை திருமணம் சட்டப்படி செல்லும் என்றும் இரு மொழிக் கொள்கை அறிவிப்புகள் உள்ளிட்ட அண்ணாவின் சட்டங்களை மனதார ஏற்றுக்கொண்டதால் தமிழர்கள் எல்லாம் வெளிநாடுகளில் பல துறைகளில் கோலோன்றி இருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

 

இந்த செயலை எல்லாம் தமிழ் ஆங்கிலம் படித்தவர்கள் செய்கிறார்கள். இந்தி படித்தவர்கள் எல்லாம் எங்கள் வீட்டில் மாடு மேய்கிறார்கள், பானிபூரி விற்கிறான், கொத்து வேலை செய்கிறார்கள் என்று பேசியிருக்கிறார். அண்ணாவின் கொள்கைகளை முழுமையாக நிறைவேற்றியதால் தான் நம்மால் வெளிநாடுகளுக்கு சென்று கோலூன்ற முடிகிறது.

 

ஆனால் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் நாமும் வடநாட்டிற்கு சென்று இது மாதிரியான வேலைகளை தான் செய்ய வேண்டும், பானிபூரி விற்க வேண்டும். நீங்கள் நிதியை விடுவிக்கவில்லை என்றாலும் நாங்கள் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எங்களுக்கு இருமொழிக்கொள்கை தான் என்று முதலமைச்சர் கூறிவிட்டார்” என்று கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon